மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Spread the love

கொழும்பு மாவட்டத்தில் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொன்னத்தர கிராம சேவகர் பிரிவு, தெல்தர கிராம சேவகர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டிவில பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பணாமுரபொலிஸ் பிரிவிற்குட்பட்ட உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவு

மற்றும் வேவல்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்..


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: