சமையல் எரிவாயு விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையில் திடீரென அதிரடி விலைகுறைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடக சமையல் எரிவாயு விலையில் சுமார் 125 முதல் 150 வரையில் அதிரடி விலை குறைப்புக்கு வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்தமை மற்றும் டொலர் அதிகரிப்பு காரணமாக விலை அதிகரிக்க கம்பனிகள் கோரின. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆராய்ந்து அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தது.
நிறுவனங்களின் செயற்திறனின்மையை சீர் செய்து பாவனையாளர்களுக்கு அதன் நன்மையை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து இரு சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து அரச நிறுவனமாக நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடக தற்போதுள்ள விலையிலிருந்து சுமார் 125 முதல் 150 ரூபா வரையில் குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்த புதிய நிறுவனத்தை நிறுவி அதற்கான தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .