தொழிலதிபருடன் கள்ள காதல் கொண்ட தாய் -கண்டுபிடித்த மகள்-அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 21 வயதான பெண்ணொருவர் தன்னுடைய 42 வயதான தாயுடன் வசித்து வந்தார் .அந்த தாய்க்கு அதே பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபருடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது .இதை அந்த 21 வயதான மகள் அவரின் வாட்ஸ் அப்பை ஹேக் செய்து கண்டுபிடித்தார் .அதன் மூலம் அந்த பெண் தன்னுடைய இரண்டு நண்பர்கள் உதவியுடன், அவர் கள்ள காதலனுடன் வாட்ஸ் அப்பில் அரட்டையடித்த விவரங்களை கண்டுபிடித்து அதை வைத்து அந்த தொழிலதிபரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார் .
அதன்படி அவரின் இரு நண்பர்கள் உதவியுடன் அந்த பெண் அந்த தொழிலதிபரிடம் போன் செய்து 15 லட்சம் கேட்டார் .பணம் தரவில்லையென்றால் அவருக்கு தன்னுடைய தாயுடன் இருக்கும் கள்ள உறவை பற்றி சமூக ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார் .இதனால் பயந்து போன அந்த தொழிலதிபர் அந்த பெண்ணுக்கு 2.6 லட்சம் கொடுத்தார் .ஆனால் அந்த பெண் மேலும் பணம் கேட்டு மிரட்டவே ,அந்த தொழிலதிபர் போலீசில் அந்த பெண் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து ,அவர்களை ரகசியமாக கண்காணித்து ,அந்த பெண்ணையும் அவரின் நண்பரையும் கைது செய்தனர் .