முன்னாள் ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிவித்தல்!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisements
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70ஆவது ஆண்டுவிழா செப்டம்பர் 2ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
கொரோனா நெருக்கடியால் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் ஒரு சிலர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.
இதன்போதே மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் எனவும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் நம்பப்படுகின்றது.
Advertisements
Advertisements