கொழும்பில் மரணமான யாழ் நபர்! கதறி அழும் சகோதரி
யாழ் நாச்சிமார் கோயிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகவேல் விக்னேஸ்வரன் கோவிட் பாதிப்பினால் நேற்று மரணமடைந்துள்ளார். இவர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன,
பல இளையவர்களுக்கு அதிலும் தமிழ்ப்பற்றாளர் என்று கண்டுவிட்டால் அத்தோடு தேசியப்பற்றையும் கொண்டு இருக்க வேண்டும் என்று வலிந்து விரும்பியவர் என முகநுால் பதிவு ஒன்றில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்,
மேலும் அவர் குறிப்பிடுகையில், வளர்ந்து வரும் இளையோருக்கு நல்லதொரு ஆலோசகர், சில விடயங்களை நம்பித்தருவீர்கள். தம்பி, நீ கொள்கைகளால் சிறிது மாறுபட்டாலும் நேர்மையானவன் என்பதை எப்போதும் சொல்லி இலட்சியப் பயணத்தை மேற்கொள் என்பதை எப்போதும் நினைவூட்டும் நல்லாசான்.
பல நினைவுகளை எழுத முடியும். அதில் ஒன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வித்துவான் வேந்தனாரின் (“காலைத்தூக்கி கண்ணில் ஒற்றி கட்டி கொஞ்சும் அம்மா” பாடலாசிரியர்)அவர்களின் நினைவுவிழாவை பிரதான அமைப்பாளராக இருந்து 2019ல் திறம்பட நடத்தி முடித்தீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் குறித்த முகநுால் வாசி
தமிழ் இனத்தின்பால் ஆழ்ந்த பற்றுக்கொண்டவன், சமூகப்பணியில் அதீத ஈடுபாட்டுடன் பயணித்த உத்தமன், அசராமல் மக்களுக்காகவே தன் பொழுதைக்கழித்தவர் என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஸ்ர சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் 2000 இக்கு முன்னர் கம்ப்யூட்டரில் என்ன சிக்கல் என்றாலும் விக்கி தான். தனது எண்ணத்தை நேரே சொல்லி வழிநடத்த முயல்வார் ஒரு நேர்மையாளர் நல்லையா குமரகுருபரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.