பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.
பயணக் கட்டுப்பாடுகள் 80 முதல் 90 சதவிகிதம் வரை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய, அரச மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் வைத்திய அதிகாரி சமந்த ஆனந்த இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவே எந்த நேரத்தில் எப்படி பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை பணிப்பாளரின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக்குழு எடுக்கும் முடிவுகள் தொழில்நுட்ப முடிவாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப முடிவுகளை இராணுவம் மற்றும் காவல்துறை அமுல்படுத்த வேண்டும்.
முடிவுகளை சரியாக செயல்படுத்தவில்லை என்றால் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவம் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்திய அதிகாரி சமந்த ஆனந்த கேட்டுள்ளார்.
தொழில்நுட்ப முடிவைத் தவிர செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு மாத்திரம் அறிக்கைகளை வழங்கி தொற்றை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.