திருமணத்திற்கு அப்பாலான உறவு – கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்
வெலிமட – மெதஹின்ன பிரதேசத்தில் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கந்தேஹெல, கொடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisements
குறித்த பெண், 33 வயதான நபர் ஒருவருடன் திருமணத்திற்கு அப்பாலான உறவை பேணி வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Advertisements
Advertisements