பேசிக்கிட்டிருக்குபோதே ஏண்டா இப்படி பண்ணே …” நடுரோட்டில் கதறிய மாணவி.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குண்டூரில் அமர்தலூரு கிராமத்தில் வசிப்பவர், ரம்யா.இவர் குண்டூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி டெக் மூன்றாம் ஆண்டு படிக்கிறார் .இந்நிலையில் அந்த பெண் இன்ஸ்டாக்ராமில் வட்டெச்சேருகுரு முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரை காதலித்து வந்தார் .அந்த வாலிபர் எட்டாம் வகுப்பு கூட படிக்காதவர் ,மேலும் வேலை வெட்டி இல்லாதவர் .ஆனால் சமூக ஊடகத்தில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் என்று பொய் சொல்லி அந்த ரம்யாவிற்கு காதல் தூது விட்டார் .அவரின் பேச்சில் ஏமாந்த ரம்யாவும் அவரை காதலிக்க ஆரம்பித்தார் .
பின்னர் அவருக்கு அந்த நபரின் போலியான சுயரூபம் தெரிந்து விட்டது .அதன் பிறகு அந்த பெண் அவரை விட்டு விளக ஆரம்பித்துள்ளார் .இதனால் கோபமடைந்த அந்த நபர் அந்த ரம்யா தன்னை விட்டு வேறு யாரையோ காதலிப்பதாக சந்தேகப்பட்டார் .
இதனால் கடந்த வாரம் நடு ரோட்டிலேயே அந்த பெண்ணோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் .பின்னர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்த ஒரு கத்தியால் அந்த பெண்ணை நடுரோட்டிலேயே குத்தி கொலை செய்தார் .பிறகு அவரும் தன்னுடைய மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் .இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் அந்த நபரை கைது செய்தனர் .இந்த கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.