தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது

Spread the love

சென்னை : தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதி மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) காலை 8 மணிக்கு துவங்கியது.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல் மாதம், 6ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 4.09 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழகத்தில் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க., கூட்டணி, தி.மு.க., கூட்டணி, தே.மு.தி.க., கூட்டணி, மநீம, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவியதால் தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மிழகம் முழுதும் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. மொத்தம், 75 மையங்களில் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான ஓட்டுகளை, தனித்தனி அறைகளில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு, குறைந்தபட்சம் 14 மேஜை என்ற கணக்கில், 3276 மேஜைகளும், அதிக ஓட்டுச் சாவடி கொண்டிருக்கும் தொகுதிகளுக்காக, ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் மேஜைகளும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வகையில், 3372 மேஜைகளில், ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இது தவிர, தபால் ஓட்டுக்கள், 739 மேஜைகளில் எண்ணப்படுகின்றன.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: