ஓ.. இதுவேறயா…. ரூ.2.89 கோடி அபேஸ்.. வசமாக சிக்கிய பப்ஜி மதன் : 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!!
பெண்களை தனது ஆபாச சேட்டிங்கால் கவர்ந்து, இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக எழுந்த புகாரால் யூடியூபர் மதன் என்பவன் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து நிர்வாண புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளில் ஆயிரக்கணக்கிலான ரூபாயை சம்பாதித்துள்ளதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
யூடியூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் சைபர் கிரைம் போலீசாரின் கைகளுக்கு கிடைத்து விட்டது.
இதனிடையே, கடந்த ஜுன் 18ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மதன் மீது, ஜுலை 6ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில், பப்ஜி மதன் மீதான வழக்கில் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். அதில், கொரோனா ஊரடங்கின் போது பலருக்கு உதவி செய்வதாகக் கூறி, சுமார் 2,848 பேரிடம் ரூ.2.80 கோடி வாங்கி மோசடி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகையை சுமார் 45 நாட்களில் 30 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.