ஆபத்தான கட்டத்தில் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

Spread the love

கோவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை விட தற்போது பரவும் மூன்றாம் அலை தொடர்பான ஆய்வக அறிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகின்றது. இது கவலைக்குரிய விடயம் என  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

எனவே ஆய்வக அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொடுக்க முறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆய்வுகூட அறிக்கைகளின் ஊடாகவும், நோயாளர்களின் தரவுகளின் ஊடாகவும் பதிவாகும் நிலைமையை விட நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் அபாயமிக்கதும் ஆபத்துமிக்கதுமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் அலையின் போது இருந்த ஆய்வுகூட தாமதம் தற்போதைய மூன்றாம் அலையின் போதும் உள்ளது.

தற்போதைய நிலையை கொண்டு எதிர்காலம் தொடர்பில் கூற முடியும். பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையே தற்போதைய நிலைக்கு காரணம்.

இதேபோல் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் நிலைமை மோசமாக மாறும். சமூக இடைவெளியை தொடர்ந்தும் பேணாமல் செயற்பட்டால் நிலைமை மோசமடையும்.

ஆகவே தேவையற்ற விதத்தில் பொது இடங்களில் நடமாட வேண்டாம். இந்த நிலைமை தீவிரமடையக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: