11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, மற்றும் அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகையை இரத்து செய்யக்கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisements
குறித்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோதே கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
இதேவேளை 34 வருடங்களின் பின்னர் அம்பாறை – அரந்தலாவ பகுதியில் பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisements