புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற வைரவர் சிலை!!
புதையலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட வவுனியா பொலிஸார், இந்த நபர்களை கைது செய்துள்ளனர். வவுனியா, நெளும்குளம் பிரதேசத்தில் புதையலில் எடுக்கப்பட்ட இந்த சிலைகளை விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்காக முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisements
Advertisements
இந்த சிலைகளின் பெறுமதி தெரியாமல் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அந்த சிலைகள் விலைமதிப்பற்றதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisements