டயகம சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவினர் வருகைத்தந்து விசாரணைகளை மேற்கொண்டனர். கொழும்பு கொட்டாவ பெண்கள் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொருப்பதிகாரி வருனி போகாவத்தை தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று (27) டயகம தோட்டத்திற்கு வருகைத் தந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிசாலினி கடந்த 15 ஆம் திகதி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார்.
Advertisements
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் சிறுமியின் மரணத்திற்கு முறையான விசாரணை கோரியும் குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
Advertisements
டயகம தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி புதைக்கப்பட்ட மயான பகுதி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு இரண்டொறு தினங்களில் சடலம் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
Advertisements
இந் நிலையில் கொழும்பிலிருந்து வருகைத்தந்த விசேட பொலிஸ் குழுவினர் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியதோடு சிறுமியை வேலைக்கு அழைத்துச்சென்ற தரகர் மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Advertisements
Advertisements