இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
சில காரணங்களால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கி வேகமாக இப்படத்தை முடிக்கும் பணியில் படக்குழுவினர் உள்ளனர். தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் கதை குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
குடும்பத்து பெண் காதலனுடன் ஓடிப்போவதால் வருகிற சிக்கல் தான் படத்தின் கதை. அண்ணன், தங்கச்சி சென்டிமென்ட் கதையில் ரஜினி நடித்து நீண்ட காலம் ஆகி உள்ளதால். படம் வில்லேஜ் வரை வரவேற்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர். படத்தில் 5 பாடல்களை இமான் முடித்துள்ளாராம், படத்தில் வரும் அண்ணன், தங்கை பாடல் காலத்துக்குமான பாடலாக இருக்கும் என நம்பிக்கையில் உள்ளனர். படத்தில் ரஜினிக்கும் சூரிக்கும் கூட்டணி நன்றாக வந்துள்ளதாம்.
பெரும்பலான நடிகர்கள் ரஜினி வருவதற்கு முன்னரே வந்து விடுவார்களாம். ஆனால் சிலமுறை ரஜினி வந்த சிறிதுநேரம் கழித்துத்தான் பிரகாஷ் ராஜ் வருகிறாராம்.