தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் சிங்கம் ஒன்றிற்கு கொரோனா தொற்று உள்ளதாக வெளிவந்த நிகழ்வு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட “தோர்” எனப் பெயரிடப்பட்ட குறித்த சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவின் விசேட நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் சிங்கம் ஒன்றிற்கு கொவிட் 19 கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பின்பு சிங்கத்தின் சளி மாதிரி கண்டி பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மிருகக் காட்சிச்சாலையிலுள்ள ஊழியர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதா? இதன் மூலம் ஏனைய மிருகங்களுக்கும் கொரோன தொற்று ஏற்படுமா என்பது குறித்தும் ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் இரண்டு மிருகங்கள் திடீரென உயிர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.