தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இணையம் ஊடாக மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், இந்த அனுமதி பல நிபந்தனைகளுடனே வழங்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் இணையம் ஊடாக விற்பனை செய்வதுக்கு F L 4 அனுமதிப்பத்திரம் உள்ள மதுபானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கோவிட் தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுமதி பெறவேண்டும், அத்துடன் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யும் தொழில்நுட்பம் உள்ள நிறுவனங்களுக்கு வழங்க மதுவரி திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
அத்துடன் கோவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பட்டு மையத்துக்கு இதற்கான அனுமதி கோரி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது, அனுமதி இன்று கிடைக்குமாயின் நாளை முதல் செயற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானம் 2 லிட்டர். பியர் வைன் போன்றவை 12 லிட்டர் வரை ஒரு தடவையில் பெற்றுக் கொள்ள முடியும்.
மற்றும் காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரையே விற்பனை செய்ய முடியும் என மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.