இணையதளம் ஊடாக சட்ட அனுமதியுடன் மதுபானம்!…
நாட்டில் கோவிட் பரவல் காரணமாக பயணத்தடை மற்றும் மதுபானம் விற்பனைகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோத மதுபான உற்பத்திகள் மற்றும் சட்ட விரோத விற்பனைகள் அதிகரித்துள்ளது, இதன் மூலம் சமூக பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இதை கட்டுப்படுத்தும் முகமாக பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் இணையதளம் ஊடாக சட்ட அனுமதியுடன் மதுபானங்களை விற்பனை செய்ய நாட்டில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்கள் மதுவரி திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கோவிட் நிலைமைகளை கருத்தில் கொண்டு அனுமதி வழங்க இயலுமை காணப்படுகிறதா என அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,
அனுமதி கோரி நிதியமைச்சுக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.