இன்று காலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து நடைபெற்றுள்ளது.
கண்டி இராணுவமுகாமுக்கு ஒப்படைப்பத்தற்காக கோவிட் சடலம் ஒன்றை வாகனத்துக்கு பாதுகாப்பாக ஹட்டன் சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகி உள்ளது.

சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பெனடிக் வயது 57 என்கின்ற அதிகாரி உயிர் இழந்துள்ளார்.
வாகனம் வட்டவளை பகுதியில் விதியை விட்டு விலகி 200 பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

சம்பவ இடத்திலே உப போலீஸ் அதிகாரி உயிர் இழந்துள்ளார். மேலும் 3 போலீஸ் அதிகாரிகள், வாகன சாரதி மற்றும் கோவிட் தோற்றால் இறந்தவரின் உறவினர்கள் 1 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு நிலவும் காலநிலையை கரணம் என வட்டவாளை போலீசார் தெரிவித்துள்ளனர்
