தீப்பிடித்து எரிந்த MV X-Press Pearl கப்பல் தற்போது எங்சிய பகுதிகள் கடலில் மூழ்கிவருகிறது.
தீ காரணமாக கப்பலில் உள்ள பொருட்கள் பெருமளவில் எரிந்து சாம்பலாகி உள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கப்பலில் 300 மெட்ரிக் தோன்க்கும் அதிகமான மசகு எண்ணெய் இருந்துள்ளது. எண்ணெய் கடலில் கலப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று கடற்படை சுழியடிகள் கப்பலை ஆராய்ந்து உள்ளனர், தற்போது உள்ள நிலையில் எண்ணெய் உள்ளதா என ஆராயும் நிலை இல்லை என தெரிவித்துள்ளார்.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர எண்ணெய் பரவ ஆரம்பித்தால், இரசாயனங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனவும் தற்பொழுது உள்ள காலநிலை காரணமாக முடியாமல் போனால், கடற் கரையை சுத்தம் செய்ய நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

சூழல் பதிப்பிற்காக நட்டஈட்டடை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை சட்டமா அதிபர் ஆலோசனையுடன் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.
உணவட்டுன பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமையை பகுப்பாய்வி செய்து வருகின்றனர், இறப்பிற்கான கரணம் கப்பலின் இரசாயன காரணமா என்று.